Sunday, December 16, 2007

அதே காதலுடன் நான் ...!!!

செல்ல நாய்க் குட்டிக்கு கூட
கழுத்து சங்கிலியிட்டு
அழகு பார்த்ததில்லை நான் ...!!!

கவிதைகளில்
'என்னவள்' என்ற சொல்லில் விட
'நீ' என்பதிலேயே அழகாய் நிறைகிறாய் - நீ ..!!

காதலை
கேள்விக்குறியாக்கவில்லை உன்னிடம் ...
மெளனத்தை
மொழிப் பெயர்க்கவில்லை நான் ...
அதன்
அர்த்தங்களை காலம் சுமக்கட்டும் ...!!!

மற்றொரு விடியல்
நிற்க்காமல் தொடரும் நடை பயணம் ...
நின்று ரசித்த
இயற்க்கையின் அசைவுகளியெல்லாம் - நீ
அன்றும்
அதே காதலுடன் நான் ...!!!

Tuesday, November 06, 2007

மழைக்கால கவிதைகள் ... 3

கொளுத்தும் வெயிலுக்கு
குடை மறந்தாய் ...
இதோ
மேகம் பிடிக்கிறது
மழையெனும் குடை உனக்கு ...!


நிலவில்
தண்ணீர் தேடுவார்கள் ...
உன் இதழில்
தாகம் தீர்த்த
மழைத்துளியிடம் கேளாதவர் ...

எந்த நிறத்தில்
மழைத்துளிக் கேட்டாய் ... ?
அதோ
வானம் வரைகிறது வானவில்
தேர்ந்தேடுத்துக்கொள் ஏழில் ஒன்றை ..!

என்
காதலை சொல்ல
ஒரு ரோஜவின் சோகம் எதற்கு .. ?
நாம்
செல்லும் வழியில்
உன்னை கொண்டாடும் மழை
வந்தால் போதும் எனக்கு ..!!

எனக்கு
மழையில் நனைவது பிடிக்கும் என்பதே - இன்று
உன்
அழகில் நனைந்த பின் தான் தெரிந்தது ... !

உன் கூந்தலுக்கு
தேவலோகத்து பூக்களை
மழைத்துளிகளாக தூவுகிறான் வருணன் ..
என்
தோட்டத்து ரோஜாவைக்கூட பறிக்க
மனமில்லாமல் நான் ...!

./பழனி

Monday, October 22, 2007

என் நிகழ்காலத்தின் தவம்

தேம்ஸ் நதிக்கரையில் கரையெதிங்கியது
என் நிகழ்காலம் ...

நாட்கள் என்னை கடக்கவில்லை
நாட்களை எனக்குள் கடத்திக் கொண்டுயிருக்கிறேன்...

இங்கே
போதி மரம் கிடைக்கவில்லை - ஆனாலும்
நான்
என் தவத்தை கலைக்கவில்லை ..

என் சுவசத்தின் சுகந்திரம் - அது
உன் சுவத்தொடு மட்டும் தான் ...

உன் தாவணி
என் தேசியக் கொடி
உன் மெளனத்தின் மொழி
என் தேசிய கீதம் ...

உன்னை முதன்முதலாய் பார்த்த நாள்
என் நினைவில்லை - பின்
உன்னை பார்த்த ஒவ்வெரு நாளும் கூட
என் நாள் குறிப்பில் இல்லை - ஆனால்
இன்று
எதிர்க் காலத்தில் தேடுகிறேன் ...

தேடல்
அது காதலில் மட்டுமில்லை ...

மெய் ஒன்று உரக்க சொன்னால்
உன்னில் இருந்த போது உணரவில்லை
இன்று
கடல் கடந்துதான் என்னை கண்டெடுத்தேன்
ஒர் இந்தியனாக ...

./பழனி

Thursday, April 19, 2007

மழைக்கால கவிதைகள் ... 2

தினமும்
வாசல் தெளித்து
கோலமிட்டு அதன் அழகை
நீ ரசித்திருப்பாய் ....
உன்னையே மழையால் நனைத்து
அந்த கோலத்தை ரசித்து
சென்றது மேகம் ...!!!


கொளுத்தும் வெயில்
நெற்றியில் தோன்றி
கழுத்து வழி இறங்கும்
ஒரு துளி வேர்வை - என்
கோடை கால மழையாக ...!!!

இரவில்
நிலவை ரசிக்க வந்த உன்னை
மின்னலின் ஒளியில் கண்ட
மேகங்கள் - இடியென முழங்கியது
மழை மழையாய்க் கவிதைகள் ...!!!


இத்தனை அழகும்
மெய்யோ இல்லை பொய்யோ என்று
மெய் தேடி பெய்த மழைத்துளிகள் ...
மெய் சிலிர்த்துக் கொண்டன - உன்
பொன் மேனித் தொட்டவுடன் ...

உன் அழகை
என் பேனாவின் மைத்துளி
எழுதும் முன் ...
உன்னில்
வரைந்து விடுகிறது மழைத்துளி
நான் எழுத வந்த கவிதையை ...!!!

உன்னை
தேடி வரும் ஒவ்வொரு மழைத்துளியும்
ஒவ்வொரு கவிதை என்றால் - இன்றும்
நான் முடிக்கவில்லை - இந்த
" மழைக்காலக் கவிதையை ..."

./பழனி

Tuesday, January 16, 2007

இன்னும் 6 "..தா" !?

உன்னை படைத்தவுடன்
"மெய்" மறந்தான் - பிரம்மன்

என் கவிதைகளை
வாங்கிச் சென்றான் - உன்னை
இன்னும் ஆறு பிரதிகள் எடுக்க ... !

./பழனி