Tuesday, November 06, 2007

மழைக்கால கவிதைகள் ... 3

கொளுத்தும் வெயிலுக்கு
குடை மறந்தாய் ...
இதோ
மேகம் பிடிக்கிறது
மழையெனும் குடை உனக்கு ...!


நிலவில்
தண்ணீர் தேடுவார்கள் ...
உன் இதழில்
தாகம் தீர்த்த
மழைத்துளியிடம் கேளாதவர் ...

எந்த நிறத்தில்
மழைத்துளிக் கேட்டாய் ... ?
அதோ
வானம் வரைகிறது வானவில்
தேர்ந்தேடுத்துக்கொள் ஏழில் ஒன்றை ..!

என்
காதலை சொல்ல
ஒரு ரோஜவின் சோகம் எதற்கு .. ?
நாம்
செல்லும் வழியில்
உன்னை கொண்டாடும் மழை
வந்தால் போதும் எனக்கு ..!!

எனக்கு
மழையில் நனைவது பிடிக்கும் என்பதே - இன்று
உன்
அழகில் நனைந்த பின் தான் தெரிந்தது ... !

உன் கூந்தலுக்கு
தேவலோகத்து பூக்களை
மழைத்துளிகளாக தூவுகிறான் வருணன் ..
என்
தோட்டத்து ரோஜாவைக்கூட பறிக்க
மனமில்லாமல் நான் ...!

./பழனி

2 comments:

தயா said...

ஆஹா ஆஹா படிச்சவுடன இப்டி தான் தோணுது அழகான வரிகள் மழையில் இவ்ளோ விஷயம் எல்லாம் இருக்குன்னு இன்று தான் தெரிஞ்சது.//என்
காதலை சொல்ல
ஒரு ரோஜவின் சோகம் எதற்கு .. ? //
இந்த வரிகள் அருமை ரொம்பவே பிடிச்சது

Raghavan alias Saravanan M said...

நல்ல கவிதைகள் பழனி.

// என் காதலைச் சொல்ல ஒரு
ரோஜாவின் சோகம் எதற்கு?//

நச்!

வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.