Thursday, April 19, 2007

மழைக்கால கவிதைகள் ... 2

தினமும்
வாசல் தெளித்து
கோலமிட்டு அதன் அழகை
நீ ரசித்திருப்பாய் ....
உன்னையே மழையால் நனைத்து
அந்த கோலத்தை ரசித்து
சென்றது மேகம் ...!!!


கொளுத்தும் வெயில்
நெற்றியில் தோன்றி
கழுத்து வழி இறங்கும்
ஒரு துளி வேர்வை - என்
கோடை கால மழையாக ...!!!

இரவில்
நிலவை ரசிக்க வந்த உன்னை
மின்னலின் ஒளியில் கண்ட
மேகங்கள் - இடியென முழங்கியது
மழை மழையாய்க் கவிதைகள் ...!!!


இத்தனை அழகும்
மெய்யோ இல்லை பொய்யோ என்று
மெய் தேடி பெய்த மழைத்துளிகள் ...
மெய் சிலிர்த்துக் கொண்டன - உன்
பொன் மேனித் தொட்டவுடன் ...

உன் அழகை
என் பேனாவின் மைத்துளி
எழுதும் முன் ...
உன்னில்
வரைந்து விடுகிறது மழைத்துளி
நான் எழுத வந்த கவிதையை ...!!!

உன்னை
தேடி வரும் ஒவ்வொரு மழைத்துளியும்
ஒவ்வொரு கவிதை என்றால் - இன்றும்
நான் முடிக்கவில்லை - இந்த
" மழைக்காலக் கவிதையை ..."

./பழனி

6 comments:

பிரேம்குமார் said...

அழகான கவிதைகள் பழனி. மழையும் காதலும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? உங்கள் கற்பனைகள் & உவமைகள் பிரமாதம்.

சில எழுத்துப்பிழைக‌ள் இருப்ப‌தை க‌வ‌னிக்க‌

//கொழுத்தும் வெயில்
நெற்றியில் தோன்றி//

கொளுத்தும் வெயிலில்
நெற்றியில் தோன்றி

//ஒவ்வொரு கவிதைகள் என்றால் - இன்றும்
நான் முடிக்கவில்லை - இந்த//

ஒவ்வொரு கவிதை என்றால்

பழனி said...

பிரெம்குமார் ...

தங்கள் வருகைக்கும், பிழைகளை சுட்டிக் காட்டியதற்கும் மிக்க நன்றி ...

./பழனி

Anonymous said...

Blog format is beautiful.

- Nathi

Anonymous said...

Blog format is beautiful.

- Nathi

Raghavan alias Saravanan M said...

அழகான கவிதைகள்.. நல்ல சிந்தனையும் கூட!

//கொளுத்தும் வெயில்
நெற்றியில் தோன்றி
கழுத்து வழி இறங்கும்
ஒரு துளி வேர்வை - என்
கோடை கால மழையாக ...!!!
//

சூப்பரப்பு.. கோடை கால மழை! நல்ல உவமை.

சில எழுத்துப்பிழைகள்.. திருத்திக் கொள்ளவும் ப்ளீஸ்..

//மெய் சிலிர்த்து கொண்டன - உன்
பொன் மேனித் தொட்டவுடன் ...
//

மெய் சிலிர்த்துக் கொண்டன - உன்
பொன் மேனி தொட்டவுடன்...

//நான் முடிக்கவில்லை - இந்த
" மழைக்கால கவிதையை ..."//

இந்த மழைக்காலக் கவிதையை!

வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

பழனி said...

இராகவன் ..


வருகைக்கும் ... எழுத்துப்பிழைகளை சுட்டிக் காட்டியதற்க்கும் .. மிக்க நன்றி ..

நட்புடன்,
./பழனி