Sunday, June 04, 2006

குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
"Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக் கொள்வேன்
"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் - முடித்துக் கொள்வேன்
"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் ...!
"Amma" அம்மா என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

14 comments:

Anonymous said...

Fantastic .. Really fantastic ...

ப்ரியன் said...

அருமை பழனி :)

Guru said...

If only I were to be able to understand :-(

பழனி said...

மிக்க நன்றி ... ப்ரியன் ..!

VJ said...

dei ur thoughts are really good. how do u select ur theme? How u arrrive at a theme before penning it?

நாமக்கல் சிபி said...

//குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் ...!//

அருமை!

Moorthy S Venkatraman said...

இக்காலத்தின் தமிழ் உபயோகத்தை மிக எளிமையாக உணர்த்தியிருக்கிரீர்...

இதுவரை என்னை கவர்ந்த கவிதைகளில் உங்கள் வரிகள் முதலிடம் பெறுகின்றன!!

தொடரட்டும்...உங்கள் சிந்தனை..!!

வாழ்த்துக்கள்!

- மூர்த்தி

FunScribbler said...

மூர்த்தி சொல்வதுபோல.. உங்கள் கவிதைகள் என்னை ரொம்பவும் கவர்ந்துவிட்டது. நல்ல புதிய எளிய சிந்தனைகளை புகுத்தி எழுதுகிறீர்கள்.. வாழ்த்துகள்!!

சேதுக்கரசி said...

பழனி, இது உங்க கவிதைதானே? இணையத்தில் தேடினால் யார்யார் வலைப்பூவிலோ எல்லாப்பக்கமும் கொட்டிக்கிடக்கிறதே இ்ந்தக் கவிதை? :-( அடுத்த பின்னூட்டத்தில் சுட்டிகள் அனுப்புகிறேன்.

சேதுக்கரசி said...

http://priyatamil.wordpress.com/2008/02/15/kavithai-23
http://chuppandee.blogspot.com/2008/03/blog-post_26.html
http://ravicher.blogspot.com/2008/04/blog-post.html
http://blog.360.yahoo.com/blog-w0f6_1oweaIwOSrMCLSLygX7J5qD3A--?cq=1&p=18&n=28500

பழனி said...

பரந்திருக்கும் வலைக் கடலில் இக்கவிதையை அடையாளம் கண்டதொடு மட்டுமில்லாமல், அந்த வலைப்பூக்களின் பின்னூட்டகளில் இதன் மூலத்தையும் கோடிட்டு காட்டியதற்கும் ... என் மனமார்ந்த நன்றிகள் கோடி... :-)

வலையில் தேடிய பார்த்தவுடன் எனக்கும் சந்தேகம் வந்துவிட்டது .. யார் கவிதைனு ..

நட்புடன்,
பழனி

Balaji Baskar said...

pazhani, i saw your comment about "your kavithai" in "my blog". Hope you would have realized the purpose of my blog with its title! "MinAnjal"... your kavithai was excellent and very impressive and i thought i should not miss those lines in the email that i have received, thats why i pasted those lines in my blog. At a creators perspective i understand the pain of claiming duplicate identity! Again Its your kavithai and i have already updated your name as author! Sorry and i will take care of this in future!
regards,
balaji

Ramanan Sharma said...

கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..
ஆனால் இதை பிரதி செய்து அனுப்புபவர்கள் மூலத்தை குறிக்க மறந்து விடுகிறார்கள்.

S.A. நவாஸுதீன் said...

http://syednavas.blogspot.com/2009/09/blog-post.html