வானோலி சொன்னது
இன்று மழையென்று - அதை
மறுத்துச் சொன்னது தொலைக்காட்சி
என் மேகமோ தவம்கிடக்கிறது
உன் வீட்டு வாசலில் ...!
வல்லினம்
மெல்லினம்
இடையினம் - அல்ல
முன்றும் சேர்ந்த
மழையினம் - நீ !
வானில்
உன்னைப் போலவெ
சிலை செய்கிறார்களாம் - மழைத்துளிகளால்
அளவெடுத்துச் செல்கிறான் வருணன்!
இப்பொழுதெல்லாம்
மழை வாந்தால் மட்டுமல்ல
இடியிடித்தாலும் - உன் பெயரையே
முதலில் சொல்கிறேன் நான் !
தன்னில்
நனைந்த உன் அழகை
சாரலென்னும் மொழியில் கவிதையாய்
படித்து செல்கிறது மழை ..!
எண்ணி முடித்து விட்டாயா ?
இதோ - உன்னில் விழுந்த
ஒவ்வொரு மழைத்துளிக்கும்
ஒவ்வொரு கவிதைகள் ...!
எஞ்சிய கவிதைகளுக்கு - உன்
இதழின் மழைத்துளி ... சம்மதமா?
./பழனி
மழைக்கால கவிதைகள் ...3, ...2, ...1
An Episode from episodes of immigrants
6 years ago
1 comment:
nalla sinthanai!
ennakkum mazhai pidikkum...
athuvum mazhai'in sangeetham romba pidikkum
http://dhans.wordpress.com/2007/09/12/mazhayin-sanggeetham/
Post a Comment